தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக வலம் வந்தவர் சினேகன்.
700க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். பாடலாசிரியராக மட்டும் இல்லாமல் மக்கள் நீதி மய்யத்தில் இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் உள்ளார்.
சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் காதலித்து வந்த நிலையில் அவர்கள் தங்களது திருமண செய்தியை அண்மையில் அறிவித்தார்கள்.
அதன்படி இன்று சீர்திருத்த முறையில் இவர்களது திருமணம் நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
இன்று இரவு 8 மணிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தற்போது இவர்களின் அழகிய திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது.