தமிழ் தொலைக்காட்சித் துறையில் முத்திரை பதித்த ஜீ தமிழ் தொலைக்காட்சி தனித்துவமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் பெற்றதாகும்.
தென் இந்திய தொலைக்காட்சிகளின் வரலாற்றில் முதல் முறையாக ரியாலிட்டி, டிராமா மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை இதுவரை காணாத வகையில் மிகச்சிறப்பாக தனித்துவமாக ஒருங்கிணைத்து, உலகின் மிகவும் சவாலான தொடரான – ‘சர்வைவர்’ மூலம் ஒளிபரப்பவுள்ளது.
பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனமான பானிஜே ஏசியா (Banijay Asia), உலகளவில் வெற்றிகரமாக இயங்கி வருவதற்கு, இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு சர்வதேச தழுவலிலும் பல்வேறு மொழிகளில் வெளியிட்டு வருவதே சான்றாகும். இதனால் உலகெங்கும் இந்நிகழ்ச்சிக்கு தீவிர ரசிகர் கூட்டம் உள்ளது.
மேலும் பல்வேறு பின்னணியைச் சேர்ந்த பலவகையான போட்டியாளர்களை அறிமுகம் செய்வதில் துவங்கும் இந்நிகழ்ச்சியினை நடத்தப்போகும் பிரபலம் அனைவருக்கும் ஒரு கூடுதல் ஆச்சரியமாக இருப்பார். மேலும் அவர், இந்த கடுமையான சவால்களைக் எதிர்கொண்டு வாழும் பயணத்தில் தொலைக்காட்சி நேயர்களை அழைத்து செல்வது மட்டுமன்றி, போட்டிகளின்போது போட்டியாளர்களுக்கும் ஒரு அறிவுரையாளராகவும், வழிகாட்டியாகவும் செயல்படுவார்.