நவரச நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகர் கார்த்திக்.
நடுவில் பெரிய கேப்பிற்கு பிறகு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். அதேசமயம் அரசியலிலும் ஈடுபட்டு தொடர்ந்து பயணம் செய்தார்.
அண்மையில் தான் நடிகர் கார்த்திக் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
தற்போது தனது வீட்டில் உடற்பயிற்சி செய்யும் போது தவறி கீழே விழுந்துள்ளார்.
இதனால் அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.