பொதுவாக வீடுகளில் சில உணவுங்களை ஒன்றாக சேர்த்து வைக்க கூடாது என்று சொல்வார்கள். இது மூடநம்பிக்கை அல்ல… அறிவியல் பார்வையும் இதில் இருக்கின்றது என்பது நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு தெரியாது.
வாழைப்பழம்
எப்போதுமே வாழைப்பழத்தை தனியான இடத்தில் தான் வைக்க வேண்டும். ஏனெனில், வாழையின் தட்பவெப்பத்திற்கு மற்ற உணவுகள் தாக்கு பிடிக்காது.
காரணம், வாழைப்பழம் எத்திலீன் என்கிற வாயுவை வெளியிடுகிறது. எனவே இதன் அருகில் மற்ற உணவுங்களை வைத்தால் அவையும் பாதிக்கப்படும்.
இதே போன்று தக்காளி மற்றும் எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காயிலும் எத்திலீன் அதிக அளவு உற்பத்தியாவதால் இவைகளையும் சேர்த்து வைக்கக்கூடாது.
திராட்சை
திராட்சை பழங்களை பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகளிலோ அல்லது பிளாஸ்டிக் பாத்திரங்களிலோ வைப்பது நல்லதல்ல. அவ்வாறு செய்தால் அவை வேதி தன்மை பெற்று விட கூடும். குறிப்பாக திராட்சையை ஒரு போதும் பிளாஸ்டிக் பைகளில் வைக்காதீர்கள். துணி பைகளில் வைப்பது சிறந்தது.
ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு
பல இடங்களில் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சை சேர்த்து ஒரே இடத்தில் வைத்திருப்பது போன்ற படங்களை நாம் பாத்திருப்போம். ஆனால், இதனை சேர்த்து வைப்பது எதிர் எதிர் வினைகளை உண்டாக்கி விடும். இதை சமையல் அறையில் வைத்தாலும், அல்லது ஃபிரிட்ஜில் வைத்தாலும் இவை இரண்டுமே மோசமான விளைவை ஏற்படுத்தும்.
வெங்காயம், உருளை
வெங்காயமும் உருளையும் பொதுவாக ஒரே வித சூழலில் வளர்ந்த உணவுகளை ஒரே இடத்தில் பராமரிப்பது நல்லதல்ல.
குறிப்பாக வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு, இவை இரண்டுமே மண்ணுக்கு கீழ் வளர கூடிய வேர் தாவரங்கள். ஆதலால் இவற்றை ஒரே இடத்தில் வைப்பதால் மிக விரைவிலே அதன் தன்மை திரிந்து கேட்டு போய் விடும்.
வேறென்ன வைக்கலாம்..?
வெங்காயத்தின் சிறந்த நண்பனான பூண்டை இதனுடன் சேர்த்து வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
மேலும், எப்போதுமே இது போன்ற வேர் தாவரங்களான கேரட், கருணை கிழங்கு, பீட்ரூட் போன்றவற்றை இருட்டு அதிகம் உள்ள இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் அதன் தன்மை அப்படியே இருக்கும்.
தக்காளி
எப்போதுமே ஒரு சில உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்க கூடாது என்கிற வரையறை உள்ளது. குறிப்பாக தக்காளியை சொல்லலாம். இதனை ஃபிரிட்ஜில் வைப்பதால் இதன் சுவையும் மணமும் முழுவதுமாக மாறி விடும் என ஆய்வுகள் சொல்கின்றன. ஃபிரிட்ஜில் வைக்காத தக்காளிகளே அதிக சுவையும் ஆரோக்கியமும் கொண்டவையே உள்ளன.
முட்டை
முட்டை போன்ற பொருட்களை வெளியில் வைப்பதை விட ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது. ஏனெனில், இவற்றில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சி ஃபிரிட்ஜில் வைப்பதால் குறைக்கப்படுகிறது. ஆதலால், முட்டை போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைத்து சமைத்து சாப்பிடுவது சிறந்தது.