பிரான்ஸில் அடுத்த 2 நாட்களில் புயல், மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டதால் விவசாயிகள் கோதுமை அறுவடைப் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
பிரான்ஸில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கோதுமை மகசூல் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
அறுவடைக்குத் தயாரான நிலையில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், விவசாயிகள் வேக வேகமாக எந்திரங்கள் மூலம் கோதுமை மணிகளை சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்து வருகின்றனர்.