ஒரே நாளில் சாதனை படைத்த இலங்கை

இலங்கையில் ஒரேநாளில் 515,830 கொவிட்19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளமைக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் செலுத்தப்பட்ட மிக அதிக எண்ணிக்கையான கொவி;ட்19 தடுப்பூசி எண்ணிக்கை இதுவாகும். நாட்டில் ஒரே 5 இலட்சத்துக்கு அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.

தொற்றுநோயியியல் பிரிவின் தகவல்களின்படி, 418,494 பேருக்கு முதல் டோஸ் தடுப்புமருந்தாக சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 86,738 பேருக்கு இரண்டாவது டோஸ் சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை 38430 பேருக்கு முதல் டோஸ் பைஸர் பயோஅன்டெக் தடுப்பூசியும் 2168 பேருக்கு மொடேர்னா முதல் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் இதுவரை 11,242,000 பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த மைல்கல்லை எட்டிய சுகாதார அமைச்சகம் மற்றும் அரசாங்கத்திற்கு உலக சுகாதார அமைப்பு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.