இலங்கையில் கொரோனா வைரஸ் மட்டும் டெல்டா வகை புதிய வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் சில பகுதியில் மீண்டும் ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை இதுவரை பெற்று கொள்ளாதவர்கள் குறித்து நாடளாவிய ரீதியில் கணக்கெடுப்பு ஒன்றை நடாத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதார அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.