யாழ்.தாதியர் பயிற்சி கல்லுாரி மாணவர்கள் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களுடன் விடுதியில் தங்கியிருந்த 64 மாணவர்கள் கல்லுாரியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் தாதிய பயிற்சி மாணவர்கள் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந் நிலையில் தொற்றுக்குள்ளானவர்களுடன் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களை விடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் தீர்மானத்திற்கமைய அவர்களை விடுதிகளிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தனிமைப்படுத்தப்பட்டுள்ள தாதிய மாணவர்களுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை அவர்கள் அனைவரும் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றவர்கள் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.