இலங்கை உட்பட உலகளவில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இலங்கையில் உள்ள உலக சுகாதார அமைப்பின் அலுவலகம் இன்று காலை இது தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளது.
அதில் டெல்டா மாறுபாடு காரணமாக தொற்றின் அதிகரிப்பு, சமூக இயக்கம் மற்றும் சமமற்ற தடுப்பூசி வழங்கல் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கடினமாக வெற்றி கொண்ட நன்மைகள் ஆபத்தில் உள்ளன என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.