தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் பயன்படுத்தப்படும் கனரக வாகனங்களிலிருந்து எரிபொருள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 பேரை பொலிஸ் விசேட அதிரடைப் படையினர் கைதுசெய்துள்ளனர்.
நேற்று வியாங்கொடை – வந்துராவ இடையேயான மத்திய அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் எரிபொருள் நிரப்பப்பட்ட பவுசரை சோதனைக்கு உட்படுத்தியபோது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் வாகனங்கள் மேலதிக விசாரணைகளுக்காக வியாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.