தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறும் வகையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் 52 ஆயிரத்து 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.