பிக் பாஸ் சீசன் நான்காவது சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவராக நடிகை சனம் ஷெட்டி கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டில் கலந்து கொள்வதற்கு முன்பாக சனம் ஷெட்டிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இல்லை.
தர்ஷனுடன் ஏற்பட்ட காதல் காரணமாக அவர் பெயரை சம்பாதித்தார். ஆனால், பிக் பாஸ் வீட்டில் அவர் கலந்து கொண்ட பின்னர், அவருடைய நேர்மையை மக்கள் புரிந்துகொண்டனர். அவருக்கு நிறைய ரசிகர்கள் உருவாகினர்.
அத்துடன் சனம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பொழுது அவர் இல்லை என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியை நாங்கள் பார்க்க மாட்டோம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் முரண்டு பிடித்தனர்.
பிக்பாஸைவிட்டு வெளியில் வந்த பின்னர் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு புடவை அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram