நீண்ட ஒலியுடன் வானிலிருந்து விழுந்த விண்கல்!

துருக்கியின் Izimir நகரில் பயங்கர சத்தத்துடன் வானிலிருந்து விண்கல் ஒன்று விழுந்த சம்பவம் நடந்துள்ளது.

சிறிய விண்கல் போன்ற உருவமொன்று, வானிலிருந்து விழும் போது பிரகாசமான ஒளியுடன் வானிலிருந்து விழுகிறது. அந்நேரம் வானமே பச்சை நிறத்தில் ஜொலிக்கிறது, இந்த அதிசய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

வானிலிருந்து விழுந்தது செயற்கைகோளின் பாகமாக இருக்கலாம் எனவும், ஏலியன்களின் UFOவாக இருக்கலாம் எனவும் கருத்துகள் நிலவுகின்றன.