ஒப்போ நிறுவனம் புதிய தலைமுறை அன்டர் ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய தலைமுறை அன்டர் ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தொழில்நுட்பம் புகைப்படங்களின் தரம் குறையாமல் அழகான செல்பிக்களை எடுக்க வழி செய்யும். முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட அன்டர் ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பங்கள் புகைப்படங்களின் பிக்சல்களை குறைத்து வந்தன.
ஒப்போவின் புதிய தொழில்நுட்பம் சிறிய பிக்சல்களை பயன்படுத்தி 440 PPI தரத்தில் புகைப்படங்களை மிகத் தெளிவாக பிரதிபலிக்கிறது. நாள்பட்ட பயன்பாட்டில் பயனர்களால் ஸ்கிரீனின் கீழ் உள்ள கேமரா பகுதியை பார்க்கவே முடியாது. இதனால் தலைசிறந்த அனுபவம் கிடைக்கும். டிஸ்ப்ளே பயன்பாட்டின் போதும், இந்த கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒப்போ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.
அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பத்தை ஒப்போ நிறுவனம் நீண்ட காலமாக உருவாக்கி வருகிறது. முதல்முறையாக இந்த தொழில்நுட்பத்தை ஒப்போ நிறுவனம் 2019 ஆண்டு ஷாங்காய் நகரில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. எனினும், இந்த தொழில்நுட்பம் இதுவரை ஒப்போ ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படவில்லை.