மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றுடன் ஒருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவதிமான நேற்று குறித்த பிரதேசத்திலுள்ள வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்து தேடுதல் ந்வடிக்கையில் மறைத்துவைக்கப்பட்டிருந்து உள்ளூர் தயாரிப்பான துப்பாக்கி ஒன்றை மீட்டதுடன் 58 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.