பெற்றோர்களின் பேச்சை மீறி ஆக்ஷன் படத்தில் நடித்து வந்த நடிகை சாரா அலிகானுக்கு படப்பிடிப்பின்போது மூக்குடைந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கேதார்நாத் என்ற இந்தி திரைப்படத்தில் மறைந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை சாரா அலிகான். மூன்று திருமணம் செய்த பிரபல ஹிந்தி நடிகர் சைப் அலிகானுக்கும், அவரது முதல் மனைவி அம்ரிதா சிங்குக்கும் பிறந்த சாரா அலிகான், ஹிந்தி திரையுலகில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், பட்டாலியன் பெண் ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படத்தில், இராணுவ அதிகாரி வேடத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்த நிலையில், தாய் தந்தை இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும் இருவரிடமும் பேசிக் கொண்டிருந்த நடிகர் சாரா, தனது விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இராணுவ வீரர் சம்பந்தமான திரைப்படத்தில் ஆக்சன் காட்சிகள் இருக்கும் என்பதால், அதனால் சில எதிர்பாராத விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று பெற்றோர் அறிவுரை கூறி, படத்தில் நடிக வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
அதனை ஏற்றுக்கொள்ளாத நடிகை சாரா அலிகான் படத்தில் நடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அசாமில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சாராவுக்கு மூக்கு உடைந்துள்ளது. இதனால் அந்த படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், சிகிச்சைக்கு பின்னர் மூக்கில் பிளாஸ்த்திரியுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நடிகை சாரா அலிகான், தனது தாய் தந்தையிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். சாரா அலிகானுக்கு பாகிஸ்தானில் ரசிகர்கள் அதிகம் என்பதால், அங்குள்ள ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பி வருகிறது.
சாராவின் அறிமுக திரைப்படமான கேதார்நாத் திரைப்படத்தில் வேறு மதத்தை சார்ந்த மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை காதலித்து திருமணம் செய்தது போன்ற கதாபாத்திரத்தால் பாகிஸ்தானில் அவருக்கு ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram