ரவீணா ரவி Photos !

இவ்ளோ நாள் திரைக்குப் பின்னாடி குரல் கொடுத்த ரவீனா ரவி, இப்போ திரைக்கு முன்னாடி வந்திருக்காங்க. இவங்க தமன்னா, எமி, இன்னும் சில ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.டப்பிங் ஸ்டூடியோவுல நம்ம நடிப்பைச் சிலபேர்தான் பார்ப்பாங்க. கொஞ்சம் வசதியா இருக்கும். சினிமா அப்படி இல்லை. ஆரம்பத்துல கேமரா முன்னாடி நின்னு பேச ரொம்பவே திணறியதாகவும், கொஞ்சம் கஷ்டமாவும் இருந்ததாக கூறுகிறார்.

ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தோட இயக்குநர், சினிமா டைரக்டரியில இருந்த ரவீனாவின் போட்டோவைப் பார்த்துக் கூப்பிட்டார். டப்பிங் வாய்ப்புனு நினைச்சுப் போய் இருக்காங்க நம்ம ரவீனா, நீங்கதான் ஹீரோயின்’னு சர்ப்ரைஸ் கொடுத்தார்.


ரவீனாவுக்கு செம ஹேப்பி. உடனேஓகே’ சொல்லிட்டாங்க. ஆனா, ஒரு வருஷமா ஆளையே காணோம். பிறகு திடீர்னு ஒருநாள் கூப்பிட்டு ஆடிஷன் வெச்சாங்க. ஓரளவுக்கு நடித்ததாகவும், டப்பிங் கொடுக்கும்போது யாராவது சிரிப்புக் காட்டினா நான்ஸ்டாப்பா சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க ரவீனா. `ஒரு கிடாயின் கருணை மனு’ ஷூட்டிங் முழுக்கவே அப்படித்தான் இருந்ததாக கூறியுள்ளார்.

இப்போவும் டப்பிங் வாய்ப்புகள்தான் நிறைய வந்துட்டுதான் இருக்கு. இன்னும் அவர் முகம் குழந்தை மாதிரி இருக்கிறதால, ஹீரோயினா தொடர்ந்து நடிக்கக் கொஞ்ச காலம் ஆகும்னு நினைப்பதாக அவரே கூறியுள்ளார். ரவீனாவின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் காதல் அம்பு விடுகிறார்கள்.