பஞ்சாப்பைச் சேர்ந்த டாக்டர் நவ்ஜோத் சிமி பல் மருத்துவராக இருந்து ஐபிஎஸ் அதிகாரியாக மாறி உள்ளார். டாக்டர் நவ்ஜோத் சிமி கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனது கதையைப் பகிர்ந்து கொண்டார், பிரதமர் மோடியுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடிய போது, அவரைப் பாராட்டிய பிரதமர் மோடி தமது கேள்வியால் கலகலப்பை ஏற்படுத்தினார்.
வார்த்தைகளில் விளையாடும் திறனைப் பயன்படுத்தி, பிரதமர் மோடி இந்தியில் அவரிடம் பல் வலிக்கு மருத்துவம் பார்த்த நீங்கள் எதற்காக எதிரிகளின் பற்களை உடைக்கும் வேலையைத் தேர்வு செய்தீர்கள் என்று பிரதமர் கேட்டவுடன் சிமி புன்னகையுடன் பதிலளித்தார்.
புத்திசாலித்தனமாக மக்களின் வலியைத் தீர்க்கும் பணி காவல்துறை பணி என்பதால் தேர்வு செய்ததாகக் கூறினார்.
நான் நீண்ட காலமாக சிவில் சர்வீசஸில் வேலை செய்கிறேன் … ஒரு மருத்துவரின் பணி மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியின் கடமை மக்களின் வலியைப் போக்க வேண்டும், எனவே இது சேவையில் பணியாற்ற ஒரு பெரிய தளம் என்று நான் நினைத்தேன்
ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி-போலீஸ் பயிற்சி நிறுவனத்தில் தகுதி பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கடந்தவாரம் உரையாடினார்.
View this post on Instagram