நடிகை யாஷிகாவுக்கு அடுத்த பெரும் இழப்பு!

நடிகை யாஷிகா ஆனந்த். கடந்த 24ம் தேதி இரவு கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது தடுப்புச்சுவரில் மோதி அந்த கார் விபத்துக்குள்ளானது.

இதில் அவரது தோழி பவானி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த யாஷிகாவுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன் உடல்நிலை பற்றி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார் யாஷிகா. அதில் அவர் கூறியதாவது, இடுப்பு எலும்பில் பல இடங்களில் முறிவு ஏற்பட்டிருக்கிறது மற்றும் வலது கால் எலும்பும் முறிந்துவிட்டது. அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன்.

அடுத்த 5 மாதங்களுக்கு என்னால் எழுந்து நடக்கவோ, நிற்கவோ முடியாது. நான் நாள் முழுக்க படுத்த படுக்கையாக இருக்கிறேன். படுக்கையில் தான் மோஷன் போகிறேன். இடது பக்கமோ, வலது பக்கமே திரும்ப முடியவில்லை. முதுகிலும் காயம்.

அதிர்ஷ்டவசமாக என் முகத்திற்கு எதுவும் ஆகவில்லை. இது எனக்கு மறுபிறப்பு தான் என்றார். மேலும், யாஷிகாவால் தற்போதைக்கு நடக்க முடியாது என்பதால் அவரால் படங்களில் நடிக்க முடியாது.

இதனால் அவரை ஒப்பந்தம் செய்த இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் யாஷிகாவுக்கு பதில் வேறு நடிகைகளை நடிக்க வைக்க முடிவு செய்துவிட்டனர்.