மீண்டும் நாடு முழுதும் பயணத்தடையா!

நாட்டில் கொரோனா தொற்று மற்றும் திரிபடைந்த டெல்டா தொற்று பரவும் வீதம் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் கவனம் செலுத்தியுள்ளது.

அந்த வகையில், விசேட பேச்சுவார்த்தையொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பில் சுகாதாரத்துறை நிபுணர்கள், அதிகாரிகள் எனப் பலரும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

இதன்போது நாட்டின் நிலமையினை கருத்திகொண்டு பயணக்கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்கும்படி கோரிக்கையை அவர்கள் முன்வைக்கவுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.