இலங்கையில் டெல்டா தொற்றால் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் டெல்டா மாறுபாடு தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் பணிப்பாளர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.

கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில், நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சீரற்ற மாதிரி சோதனையில் இந்த அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

டெல்டா மாறுபாடு ஆபத்தான வீதத்தில் கொழும்பில் பரவி வருவதாகவும் ஜீவந்தர எச்சரித்துள்ளார்.

கடந்த வாரம் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட 75%க்கும் அதிகமான நோயாளிகள் சார்ஸ் கோவிட் 2இன் மிகவும் பரவக்கூடிய மாறுபட்டினால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.