வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோரை கண்காணிக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வார இறுதி நாட்களில் மக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுகின்றனரா என்பது கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவையில் விதிகள் மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
உரிய காரணமின்றி மாகாணம் விட்டு மாகாணம் மக்கள் பயணம் செய்வதனை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேவையின்றி மாகாணங்களை கடக்க முயற்சிப்போர் திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.