விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்டு யுத்தம் முடிந்தபின் அரசாங்கத்திடம் சரணடைந்து நீண்டகாலமாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 15 முன்னாள் போராளிகளுக்கு இன்றையதினம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா கலந்துகொண்டு உதவித்திட்ட நிதியினை வழங்கிவைத்தார்.
யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் முயற்சியின் பயனாக தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் வாமதேவா தியாகேந்திரனின் நிதிப் பங்களிப்பில் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர், யாழ் மாவட்ட இராணுவ படைப்பிரிவுகளின் தளபதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது