சீனாவின் வுகானில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ள நிலையில் அங்கு ஒரு கோடியே 12 லட்சம் பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
வுகான் மக்கள் தொகை ஒரு கோடியே 20 லட்சமாக உள்ள நிலையில் அதில் ஒரு கோடியே 12 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அந்நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 15 பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் தொற்று இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒரு சில நாட்களிலேயே ஒரு கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா சீனாவின் வுகானில் இருந்துதான் முதன் முதலில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.