கருவின் வளர்ச்சிக் காலம் மற்றும் தாய் உட்கொள்ளும் அளவு மருந்துகளின் இரண்டும் கருவின் மீது மருந்துகள் ஏற்படுத்தும் தாக்கத்தைத் தீர்மானிக்கின்ற காரணிகளாகின்றன.
கருவுற்ற தாய்க்கும், கருவுக்கும் சில நேரங்களில் மருந்துகள் மிகவும் முக்கியமான தேவையாக இருக்கும் அப்படிப்பட்டவர்கள் மருந்தானாலும், சத்துணவு மாற்றானாலும், மருந்துவரின் ஆலோசனையின்றி எதையும் உட்கொள்ளக் கூடாது. தேவையெனின், வைட்டமின் மற்றும் தாதுக்கள் அடங்கிய மாத்திரைகளை உட்கொள்ள மருத்துவர்களே சிலருக்குப் பரிந்துரைப்பர்..
கருவுற்ற தாய் உட்கொள்ளும் மாத்திரைகள், கருவின் வளர்ச்சிக்குப் பிராணவாயுவும் பிற சத்துக்களும் செல்லக்கூடிய நஞ்சுக்கொடி வழியாகவே செல்லும். எனவே, கருவுற்ற தாய் உட்கொள்ளும் மருந்துகள், மாத்திரைகள் கருவை பலவிதங்களில் பாதிக்கும்:
இவைகள் கருவை நேரடியாக பாதித்து கருவின் வளர்ச்சியில் அசாதாரண மாற்றத்தை (பிறவிக் குறைபாடுகள்) ஏற்படுத்தலாம்; சில சமயங்களில் கரு இறக்கவும் நேரிடலாம்.
இவைகள் சில சமயங்களில் நஞ்சுக் கொடி சுருங்கி, கருவுக்குச் செல்ல வேண்டிய பிராணவாயு மற்றும் பிற சத்துக்கள் செல்லாமலோ, மிகக் குறைந்த அளவோ கிடைக்க செய்யலாம். இதன் விளைவாக குழந்தை வளர்ச்சி குறைந்தோ, எடை குறைந்தோ பிறக்கலாம்.
இவைகளால் கருப்பையின் தசைநார்கள் அழுத்தமாக சுருங்கி, விரிய நேரிடலாம். இது கருவுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தைத் தடை செய்வதோடு, உரிய காலத்திற்கு முன்பே பிரசவ வலியை ஏற்படுத்தி, குறைப்பிரசவத்தை ஏற்படுத்தக் கூடும்.
கருவுற்ற தாயின் இரத்தத்தை குடல் உறிஞ்சியின் அருகிலுள்ள நஞ்சுக் கொடியின் மிக மெல்லிய தசைப்படலமே சிசுவின் இரத்தத்தில் இருந்து தாயின் ரத்தத்தை பிரிக்கிறது. கருவுற்ற தாய் உட்கொள்ளும் மருந்துகள் குடல் உறிஞ்சியின் உள்ள இரத்தக் குழாய்கள் மூலம் மெல்லிய திரையைக் கடந்து தொப்புள் கொடி வழியாக கருவைச் சென்றடையும்.
கருவின் வளர்ச்சிக் காலம் மற்றும் தாய் உட்கொள்ளும் அளவு மருந்துகளின் இரண்டும் கருவின் மீது மருந்துகள் ஏற்படுத்தும் தாக்கத்தைத் தீர்மானிக்கின்ற காரணிகளாகின்றன. கரு உருவாகி 20 நாட்களுக்குள் தாய் உட்கொள்ளும் சில மருந்துகள் கருவையே அழித்துவிடநேரிடலாம் அல்லது எந்தவொரு பலனும் கூட இல்லாமல் இருக்கலாம். கருவின் உறுப்புகள் வளரும் கருவுற்று 3 முதல் 8 வார காலத்தில், மருந்துகளால் கரு எளிதில் பாதிப்படையக் கூடியது.
இக்காலகட்டத்தில் உட்செல்லும் மருந்துகளால் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமலிருக்கலாம் அல்லது கருக்கலைய நேரிடலாம். சில சமயங்களில், பிற்காலத்தில் வெளிப்படையாகத் தெரியக்கூடிய குறைபாடுகளை ஏற்படுத்தலாம். கருவுற்று எட்டு வாரங்களுக்குப் பிறகு உட்கொள்ளும் மருந்துகளால் வளர்ச்சியுற்ற சிசுவின் உடலுறுப்புகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளில் ஏதேனும் சில பாதிப்பை ஏற்படுத்தலாம்.
உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை (FDA), கருவுற்ற காலத்தில் உட்கொள்ளும் சில மருந்துகள் கருவின் மீது ஏற்படுத்தும் பாதிப்பின் அளவைக் கொண்டு மருந்துகளை வகைப்படுத்தியுள்ளது. அதிக விஷத்தன்மை கொண்ட சில மருந்துகளால் பிறப்பு குறைபாடுகள் நிகழ வய்ப்புள்ளதனால் , கருவுற்ற பெண்கள் இத்தகைய மருந்துகளை உட்கொள்ளவே கூடாது எனத் தடை செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக, தலிடோமைடு (வணிகப் பெயர் – தாலோமிட்) என்னும் மருந்து, பல ஆண்டுகளுக்கு முன்பு இம்மருந்தால் சிசுவின் கை, கால் வளர்ச்சியை வெகுவாகக் குறைப்பதோடு, குடல், இருதயம், இரத்த நாளங்கள் ஆகியவற்றையும் பாதிப்படைய செய்தது. சில மருந்துகள் விலங்குகளில் பிறப்புக் குறைபாடுகளை ஏற்படுத்திய போதும் மனிதர்களில் ஏதும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. உதாரணமாக ஆன்டிபெர்ட் என்று சொல்லக்கூடிய மிக்லீஸின். இம்மருந்து வாந்தி, அஜீரணக் கோளாறுகளுக்காக உட்கொள்ளப்படுகிறது.