சீன ஊடகங்களில் வெளியான போலி செய்திகளைக் கொண்ட கட்டுரைகள் மற்றும் பதிவுகளை அகற்றுமாறு சீனாவில் உள்ள சுவிஸ் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
சமீபத்திய நாட்களில் சீன ஊடகங்களில் மேற்கோள் காட்டப்பட்ட நபர் ஒரு சுவிஸ் விஞ்ஞானி அல்லர் என்றும் சுவிஸ் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தொற்றின் தோற்றம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுதந்திரம் குறித்து “வில்சன் எட்வர்ட்ஸின்” கருத்துகளுடன் கட்டுரைகள் வெளியாகியிருந்தன.
அதோடு அவரது பெயரில் உள்ள பேஸ்புக் கணக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது என்றும் அதில் மூன்று நண்பர்கள் மட்டுமே இருப்பதாகவும் சுவிஸ் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் துரதிருஷ்டவசமாக சீன மக்களுக்கு இந்த செய்தி தவறானது என தெரிவிக்க வேண்டிய கடமை தமக்கு இருப்பதாகவும் சுவிஸ் தூதரகம் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.