இன்றைய ராசிபலன்கள் (12.08.2021)

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஆகஸ்ட் 12-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்
மேஷ ராசி அன்பர்களே!

இன்று மகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாயின் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. பிற்பகலுக்குமேல் பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வெளியிலிருந்து உணவு வரவழைத்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். வியாபாரத்தில் பணியாளர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். தட்சிணா மூர்த்தியை வழிபட, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, அதிகரிக்கும் செலவு களால் கடன் வாங்க நேரிடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பாராத பணவரவுடன் வீண் செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணை வழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.

மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். முருகக் கடவுளை வழிபட, சங்கடங்கள் நீங்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையால் பொருள் சேர்க்கை உண்டு.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் புதிய முயற்சிகள் அனுகூலமாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

கடகம்
கடக ராசி அன்பர்களே!

பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். இளைய சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். நண்பர் ஒருவர் கேட்கும் உதவியை மகிழ்ச்சி யுடன் செய்து தருவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எப்போதும்போல் இருக்கும். இன்று நீங்கள் துர்கையை வழிபடுவது நன்று.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி தரும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பேசும்போது வார்த்தைகளில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் வீண் செலவுகளால் சஞ்சலம் ஏற்படும். சிவபெருமானை வழிபட, நன்மைகள் அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், செயல்களில் பதற்றம் தவிர்ப்பது நல்லது.

கன்னி
கன்னி ராசி அன்பர்களே!

பணவரவு திருப்தி தரும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மனதில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களுக்காகச் செலவு செய்ய நேரிடும். சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் கனிவான அணுகுமுறை அவசியம். வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் மனக்குழப்பங்கள் நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது அவசியம்.

துலாம்
துலா ராசி அன்பர்களே!

பிற்பகலுக்குமேல் மனதில் உற்சாகம் ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். செலவுகள் அதிகரிப்பதால் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். லட்சுமி நரசிம்மரை வழிபட, முயற்சிகள் சாதகமாக முடியும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாகும். உங்கள் பொறுப்புகளை வாழ்க்கைத் துணை பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி, அவருடன் சுமுகமான உறவு ஏற்படும். அவரிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்குத் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். இன்று நீங்கள் மகா விஷ்ணுவை வழிபட, நன்மைகள் அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.

தனுசு
தனுசு ராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். தாய்வழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கக் கூடுதல் உழைப்பு தேவை. புதிய வாடிக்கையாளர் அறிமுகம் கிடைக்கக்கூடும். ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் கூடுதலாகும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகளால் பெருமை யும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.

மகரம்
மகர ராசி அன்பர்களே!

பணவரவு இருந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்பட்டு திக்குமுக்காட வைக்கும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். அவர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வாழ்க்கைத்துணை வழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபட, மகிழ்ச்சி அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, நண்பர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படும்.

கும்பம்
கும்ப ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில சிரமங்கள் ஏற்படும். மகான் ஷீர்டி சாயிபாபாவை வழிபட, மன அமைதி பெறலாம்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வெளியில் செல்வதை கூடுமானவரை தவிர்த்துவிடுவது நல்லது.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீனம்
மீன ராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு சகோதரர்கள் மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்திசெய்வீர்கள். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். இன்று நீங்கள் விநாயகப்பெருமானை வழிபட, நன்மைகள் கூடுதலாகும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிரிகளால் மறைமுக ஆதாயம் ஏற்படும்.