உத்திர பிரதேச மாநிலம் ஹோலகாரில் உள்ள பாகுதிபூர் கதனா கிராமத்தில் 15 வயதான பெண்ணொருவர் தன்னுடைய சகோதரர் மற்றும் சகோதரி மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தார்.
அந்த பெண்ணை வீட்டு வேலைகள் செய்ய சொல்லி அனைவரும் கொடுமைப்படுத்தியுள்ளனர். அதனால் அந்த பெண் அனைவர் மீதும் கடுமையான கோபத்திலிருந்தார் .
அதனால் அவர்கள் அனைவரையும் கொல்ல திட்டமிட்டார் .அதன்படி கடந்த வாரம் அவர்கள் வீட்டில் சமைக்கப்பட்ட உணவில் அவர் விஷம் கலந்து விட்டார் .
அதை அந்த வீட்டிலுள்ள அனைவருக்கும் பரிமாறிவிட்டு அந்த உணவை அவர் சாப்பிடாமல் விட்டார் .அதனால் அந்த வீட்டிலிருந்த அவரின் சகோதரி சகோதரன் மற்றும் தந்தை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்கள்.
பிறகு அந்த இளம்பெண்ணின் சகோதரர் ரச்சித் மற்றும் சகோதரி அங்கிதா – இருவரும் ஆகஸ்ட் 8 அன்று இறந்து விட்டனர் . பின் இது பற்றி அந்த பெண்ணின் தாயார் பொலிஸில் புகாரளித்தார் .
பொலிஸார் வழக்கு பதிந்து அந்த பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.