யாழில் இறக்கப்போகும் நேரத்திலும் தனது இரு சிறு நீரகங்கங்களையும் தானம் செய்த இணுவில் மருதனார்மடத்தை சேர்ந்த தங்கராசா – பிரிஞ்சன் எனும் இளைஞனின் செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
குறித்த இளைஞர் வீதியில் மிதிவண்டியில் சென்றபோது வேகமாக வந்த டிப்பர் ரக வாகனம் மோதி படுகாயமடைந்துள்ளார்.
எனினும் உயிருக்குப்போராடிக்கொண்டிருக்கும் தருவாயில் அவரது சுயவிருப்பின்பேரில் அவர் தனது உறுப்புக்களை தானமாக வழங்கியதாக கூறப்படுகின்றது.
அவர் தனது இரு சிறுநீரகங்களையும் இருவருக்கு யாழ். வைத்தியசாலையின் ஊடாக தானமாக வழங்கியுள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞரின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.