நாட்டில் கோவிட் மற்றும் டெல்டா அச்சுறுத்தல் தலைவிரித்தாடிவருகின்ற சூழ்நிலையில், தற்போது கொழும்பிலுள்ள பிரபல பத்திரிகை நிறுவனங்களிலும் டெல்டா தொற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி சில பத்திரிகை நிறுவனங்களின் சில பிரிவுகளில் தொழில்புரிகின்ற ஊழியர்களுக்கு டெல்டா தொற்றின் அறிகுறிகள் தென்பட்டதால் அப் பிரிவுகள் மூடப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
குறிப்பிட்ட பத்திரிகை நிறுவனங்களில் அச்சுப் பிரிவில் பல ஊழியர்களும் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த பத்திரிகை நிறுவனங்கள் ஊழியர்களை வேலைக்கு அழைப்பதில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றன.