இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி மகனின் திருமண வைபவம் நீர்கொழும்பு தேவாலயத்தில் இடம் பெற்றது!

கொரோனா தொற்றுநோய் காரணமாக ஷாங்க்ரிலா ஹொட்டலில் நடத்த இருந்த தன் மகனின் திருமண வைபவத்தை இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இரத்து செய்திருந்தார்.

இதேவேளை நீர்கொழும்பில் உள்ள தேவாலயத்தில் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களின் சிறிய குழு பங்கேற்புடன் எழிமையான முறையில் தனது ஒரே மகனின் திருமணத்தை நடத்தியுள்ளார்.