நாட்டில் கட்டாயமாகும் தடுப்பூசி அட்டை!

நாட்டில், பொது இடங்களிற்கு செல்லும் போது, 30 வயதிற்கு மேற்பட்டவர்களின் தடுப்பூசி அட்டைகள் மட்டுமே பரிசோதிக்கப்படும் என்று அரச தகவல் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

இன்று மாலை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இராணுவத் தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா, இதனை தெரிவித்துள்ளார்,

மேலும், இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் நுழைய அனுமதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

எனினும், இலங்கை இன்னும் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கவில்லை. இதுவரை மேற்கு மாகாணத்தில், 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட வீதத்தையும் அரசு வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு: 51%, கம்பஹா: 48%, களுத்துறை: 55%. தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.