நாட்டை முழுமையாக முடக்குவதற்கான வைத்திய பரிந்துரைகளை வழங்கினால். அதனடிப்படையில் செயற்படுவதற்கு அரசாங்கம் எந்நேரமும் தயாராகவே இருக்கிறது எனத் தெரிவித்த மருந்து வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன, அதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கிறது என்றார்.
நாட்டை முழுமையாக முடக்குமாறு வைத்திய நிபுணர்கள் இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக எந்தவொரு பரிந்துரைகளையும் முன்வைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளின் பிரகாரமே அரசாங்கம் சகல தீர்மானங்களையும் எடுக்கிறது. அதேபோல அந்த ஆலோசனைகளை செயற்படுத்துவதற்கும் அரசாங்கம் எந்நேரமும் தயாராகவே இருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.