மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலயத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 299 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் நாகலிங்கம் மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 24 மணித்தியாலயத்தில் களுவாஞ்சிக்குடியில் ஒருவரும், வவுணதீவில் ஒருவரும், வாழைச்சேனையில் ஒருவர் உட்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 146 ஆக அதிகதித்துள்ளது. இதேவேளை கடந்த 24 மணித்தியாலயத்தில் களுவாஞ்சிக்குடியில் 31 பேருக்கும் மட்டக்களப்பில் 109 பேருக்கும் காத்தான்குடியில் 7 பேருக்கும் ஓட்டுமாவடியில் 12 பேருக்கும் வாழைச்சேனையில் 14 பேருக்கும் கோறளைப்பற்று மத்தியில் 2 பேருக்கும் பட்டிருப்பில் 3 பேருக்கும் வெல்லாவெளியில் 16 பேருக்கும் கிரானில் 13 பேருக்கும் செங்கலடியில் 37 பேருக்கும் வாகரையில் 32 பேருக்கும் ஆரையம்பதியில் 6 பேருக்கும் பாதுகாப்பு படையினர் 5 பேருக்கும் மற்றும் ஏறாவூரில் ஒருவர் உட்பட 299 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால் மக்கள் மேலும் விழிப்புடன் செயற்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.