இலங்கையின் திருகோணமலை துறைமுகத்திலிருந்து ஷக்தி என்ற இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கப்பல் இந்தியாவுக்கு இன்று மாலை புறப்படவுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு ஒட்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நெருங்கிவரும் நிலையில் அதனை சமாளிக்க இலங்கை அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருகின்றது.
அதன்படி, கொவிட்−19 சிகிச்சைகளுக்கு தேவையான 100 மெற்றிக்தொன் ஒக்சிஜனை, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்காக இலங்கை கடற்படையின் கப்பல் இன்று மாலை சென்னை நோக்கிப் புறப்படுவதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளரான கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.