வீடில் இருக்கும் போதும் முகக்கவசம் அணிய வலியுறுத்தும் வைத்தியநிபுணர்!

நாட்டில் டெல்டா தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வரும் நிலையில், பொது மக்கள் வீட்டில் இருக்கும் போதும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணரான தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்றானது 15 விநாடிகள் எனும் குறுகிய காலத்தில் ஏற்படுவதால், அக்காலப் பகுதியில் ஒருவ ருக்கு தொற்று ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது மக்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.