தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! காரணம் என்ன?

தங்கம் விலை சில தினங்களாக குறைந்துவந்த நிலையில் திடீரென மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதன்படி சர்வதேச சந்தையில் கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து தங்கம் விலையானது ஏற்றத்தினை கண்டு வருகின்றது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை இன்று 1794.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.

ஒரு அவுன்ஸ் தங்கம் விலை கடந்த வார இறுதியில் 1763.50 டாலர்களுக்கு அருகில் வர்த்தகமாகி முடிவடைந்திருந்தது.

இதேவேளை 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று யாழ்ப்பாணத்தில் ரூபா.123,000 வரையில் விற்பனையாகி வருகின்றது.

அத்துடன் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூபா.112,000 வரையில் விற்பனையாகி உள்ளமை கூறத்தக்கது.

எவ்வாறாயினும் நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்ற நிலையிலேயே இருந்து வருகின்றது.