இலங்கையிலிருந்து கனடா செல்ல முயற்சித்த யாழ் இளைஞன் கைது!

போலி தகவல்களை பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்த இலங்கை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படை அடையாள சான்றிதழை வழங்கி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞன் நேற்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எல்லைக் கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர் யாழ்ப்பாணம் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.

அவர் நேற்று காலை 10.30 மணியளவில் கட்டார் நாட்டின், டோஹாவிற்கு செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளார்.

இளைஞன் சமர்ப்பித்த ஆவணங்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டு அதிகாரிகள் அதனை சோதனையிட்ட போது அவை போலியானதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.