இன்று தொடக்கம் 30 ம் திகதி வரை பொதுப்போக்குவரத்து ரத்து!

இன்று முதல் எதிர்வரும் 30 ம் திகதி வரை பொதுப்போக்குவரத்து சேவைகள் எதுவும் இயங்காது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுஹம தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளிற்கான வேண்டுகோள்களை விடுக்கும் நிறுவனங்களிற்கு மாத்திரம் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அத்தியாவசிய சேவைகளை தவிர வேறு எதற்காகவும் பொதுப்போக்குவரத்து இடம்பெறாது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.