சத்தான பேரிச்சம்பழம் லட்டு செய்யலாம் வாங்க..

பேரீச்சம்பழத்தில் நீரில் கரையும் மற்றும் கரையாத இருவகை நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை மலச்சிக்கலை எளிதாக போக்கி, உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் வெளியேற்றும்.

தேவையான பொருட்கள்:

பேரிச்சம்பழம் – ஒன்றரை கப்
பாதாம் – அரை கப்
முந்திரி – அரை கப்
தேங்காய் துருவல் – அரை கப்
கசகசா – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு ஜாரில், கொட்டை எடுத்த பேரிச்சம் பழம் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பாதாம், முந்திரியை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு வாணலியில், தேங்காய்த் துருவல் போட்டு ஈரப்பதம் போகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

அதே வாணலியில், கசகசா போட்டு மிதமான சூட்டில் வறுத்து பேரிச்சம்பழத்துடன் சேர்க்கவும்.

பிறகு, வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

இறுதியாக, பேரிச்சம் பழத்துடன், தேங்காய்த் துருவல், வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாக பிசைந்து லட்டு போன்று பிடித்துக் கொள்ளவும்.

அவ்ளோதாங்க.. சத்தான பேரிச்சம் பழம் லட்டு ரெடி..!.