முகத்தை அழகாக்கும் ஆவாரம் பூக்கள்

பசுமையான ஆவாரம் பூக்கள் அல்லது காய வைத்த பூவின் பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தயிரில் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள் நீங்கும்.

ஆவாரரை சருமத்திற்கு மினுமினுப்பை கொடுக்கும். தோல் வறட்சியை சரி செய்யும்.

உடலில் ஏற்படும் துர்நாற்றம் நீங்க ஆவாரம் பூவை அரைத்துப்பூசிக் குளித்து வரலாம்.

ஆவாரம் பூக்களை எடுத்து ரோஜா இதழ், எலுமிச்சை தோல், கஸ்தூரி மஞ்சள், பச்சை பயறோடு சேர்த்து அரைத்து குளிக்கும் போது பயன்படுத்தி வந்தால் தோலில் ஏற்படும் அரிப்பு நமைச்சல் ஆகியவை சீக்கிரமே குணமாகும். கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள், முகத்தில் ஏற்படும் சுருக்கம் போன்றவை நீங்கும்.

ஆவாரம் பூவை நிழலில் காய வைத்து டப்பாவில் சேகரித்து எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.

பசுமையான ஆவாரம் பூக்கள் அல்லது காய வைத்த பூவின் பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தயிரில் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள் நீங்கும். முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்சனை இருப்பவர்களுக்கு அது நீங்கி முகம் அழகும் பளபளப்பும் பெறும்.

ஆவாரம் பூவின் பொடியை பயன்படுத்தி தொடர்ந்து குளித்து வந்தால் உடலில் ஏற்படும் வியர்வை துர்நாற்றம் நீங்கும்