இலங்கையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 4,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இன்று (23) நாடு முழுவதும் 4,355 தொற்றாளர்கள் பதிவாகினர். நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 394,355 ஆக அதிகரிக்கிறது.
இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 4,353 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வந்த இரண்டு நபர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது.
இதேவேளை, கோவிட் -19 ல் இருந்து குணமடைந்த 2,222 பேர் இன்று வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறினர்.