மாங்காய் புலாவ் செய்யலாம் வாங்க…

மாங்காயில் ஊறுகாய், பச்சடி, தொக்கு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மாங்காயில் எளிய முறையில் சூப்பரான புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

உதிராக வடித்த சாதம் – 3 கப்,
கிளி மூக்கு மாங்காய் (சிறிய சைஸ்), – ஒன்று,
பச்சைப் பட்டாணி – கால் கப்,
வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று,
முந்திரித் துண்டுகள் – ஒரு டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன்,
பட்டை – சிறு துண்டு,
ஏலக்காய், கிராம்பு – தலா ஒன்று,
சோம்பு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

மாங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.

கேரட், வெங்காயம் பச்சை மிளகாயை ஆகியவற்றையும் பொடியாக நறுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெயை காயவிட்டு… பட்டை, கிராம்பு, உடைத்த ஏலக்காய், சோம்பு சேர்த்து சிவக்க வறுக்கவும்.

இத்துடன் பட்டாணி, பச்சை மிளகாய், மாங்காய் மற்றும் காய்கறிகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

காய்கள் வெந்ததும் அடுப்பை தணித்து சாதத்தை சேர்த்து, உப்பு போட்டு கிளறவும்.

பிறகு மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, கொத்தமல்லியை சேர்த்துக் கிளறி, முந்திரித் துண்டுகளை மேலாக தூவி இறக்கி பரிமாறவும்.