சீனி விலை அதிகரிப்பு தொடர்பாக பதில் கூற இயலாத நிலையில் அரசாங்கம்

நாட்டில் இன்று சீனி கிலோ ஒன்றின் விலை 210 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றதாக கூறப்படுகிறது.

கடந்த வாரத்தில் சீனி விலை 160 ரூபாவாக காணப்பட்ட நிலையில், திடீரென 50 ரூபாவினால் விலை உயர்ந்துள்ளது.

எனினும் இவ்வாறு சீனி விலையின் திடீர் உயர்வுக்கு தம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்று பாவனையாளர் அலுவல்கள் பற்றிய இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவிதுள்ளதாக கூறப்படுகின்றது.