இலங்கையில் இரு தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

பைசர் மற்றும் ஆஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு தொற்று எதிரான பாதுகாப்பு குறைந்து வருவதாக சர்வதேச ஊடங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் பைசர் அல்லது ஆஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டு அளவுகளைப் பெற்ற ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களிடையே குறித்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த பரிசோதனையின் போதே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மே மற்றும் ஜூலை மாதமளவில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தரவை உள்ளடக்கியே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பைசர் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டவர்களின் பாதுகாப்பு ஒரு மாதத்தில் 88% லிருந்து ஐந்து முதல் ஆறு மாதங்களில் 74% ஆகக் குறைந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை ஆஸ்ட்ராசெனெகாவைப் பொறுத்தவரை, நான்கு முதல் ஐந்து மாதங்களில் 77% இல் இருந்து 67% ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.