பெண்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த தாலிபான்!

புதிய தலிபான் ஆட்சியின் கீழ் நாட்டில் இசை அனுமதிக்கப்படாது என்று போராளிகள் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

நியூயார்க் டைம்ஸிடம் பேசிய தலிபான் போராளிகள் குழுவின் செய்தித் தொடர்பாளர் Zabihullah Mujahid, இஸ்லாத்தில் இசை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மக்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக, இதுபோன்ற செயல்களைச் செய்யக்கூடாது என்று நம்ப வைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் ஆதாரமற்றவை. பெண்கள் வீட்டில் தங்க வேண்டியதில்லை அல்லது எப்போதும் முகத்தை மறைக்க வேண்டியதில்லை.

மூன்று நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பயணங்களுக்கு மட்டுமே பெண்கள் ஒரு ஆண் பாதுகாவலர் துணையுடன் இருக்க வேண்டும் என்ற விதி பொருந்தும் என்று Zabihullah Mujahid கூறினார்.

முன்னதாக, பெண்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சரியான அமைப்புகள் உருவாக்கப்படும் வரை வீட்டிலேயே இருக்குமாறு செவ்வாய்க்கிழமை Zabihullah Mujahid எச்சரித்திருந்தார்.

ஏனென்றால் சில தலிபான் போராளிகளுக்கு பெண்களை காயப்படுத்தவோ துன்புறுத்தவோ கூடாது என்று பயிற்சி அளிக்கப்படவில்லை என காரணம் கூறினார்.

புதிய மற்றும் இன்னும் நன்கு பயிற்சி பெறாத எங்கள் போராளிகள், பெண்களை தவறாக நடத்தலாம் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்” என்று Mujahid கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.