தாலிபான்களின் மரண தண்டனையில் இருந்து தப்பிய பெண்! வழங்கிய தகவல்கள்

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி இந்தியாவில் இருக்கும் பெண் ஒருவர் தாலிபான்கள் மாறவேமாட்டார்கள் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதால், அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதற்கிடையில், தாலிபான்களின் ஆட்சியில்(20 ஆண்டுகளுக்கு முன்பு) இருந்த போது, அவர்களிடம் இருந்து தப்பிய பெண் Fariba Akemi,தற்போது இந்தியாவில் இருக்கிறார்.

 

இவர் தாலிபான்கள் குறித்து பிரபல ஆங்கில ஊடகமான தி இண்டிபெண்டண்ட்க்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அவர் தாலிபான்கள் மாறவேமாட்டார்கள், கொடுமையானவர்கள் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், தாலிபான்கள் தற்போது அளித்துள்ள வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகள். அதை நம்ப முடியாது. அவர்கள் என்னைக் கண்டால் கொன்றுவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் மூன்றாவது மிகப் பெரிய நகரமான Herat-ஐ சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க இவர், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய முழு குடும்பம், மற்றும் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் விட்டு வெளியேறியுள்ளார்.

இவருக்கு 14 வயது இருந்த போது பெற்றோர், கொஞ்சம் அறிமுகமான நபரை திருமணம் செய்து வைத்துள்ளனர். Herat நகரைப் பொறுத்தவரை வயது பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுவதில்லை.

Fariba Akemi-ஐ திருமணம் செய்த நபர் 20 வயது மூத்தவர். நிதி நெருக்கடி காரணமாக அவரை பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் அவரைப் பற்றி முழுமையாக திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

திருமணத்திற்கு பின் Fariba Akemi-ஐ அடித்து துன்புறுத்தியுள்ளார். அவரை படிக்காவிடாமல் தடுத்துள்ளார்.

இவர்களுக்கு நான்கு மகள்கள் பிறந்தனர். விதி என்று வாழ்ந்து வந்த போது, மூத்தமகளை கடன் சுமை காரணமாக அவரின் கணவர், தாலிபான் போராளிகளுக்கு விற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி போதை பொருள் செய்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கிடையில் 12 வயது சிறிய மகளை அவர் விற்றுள்ளார். இது குறித்து பொலிசாரிடம் சொன்னால், மீதம் உள்ள இரண்டு மகள்களையும் கத்தியால் குத்திவிடுவேன் என்று மிராட்டி வந்துள்ளார்.

அவரையும் தொடர்ந்து தாக்கியுள்ளார். இருப்பினும் மீண்டும் இரண்டு மகள்களை அவர் விற்க முடிவு செய்ததால், உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் தெரிவிக்க, அவரின் கணவர் அந்த நகரத்தை விட்டு தப்பி ஓடியுள்ளார்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணைக்கு பின்னரே அவன் தாலிபான் போராளி என்று கண்பிடித்துள்ளனர். அதன் பின் தாலிபான்களிடம் இருந்து இவருக்கு அழைப்பு வந்துள்ளது.

என் கணவர் வாங்கிய பணத்திற்காக மூன்றாவது மகள் தேவை என்று கூறியுள்ளனர். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அவர், எப்படியாவது ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

தொடர்ந்து தாலிபான்கள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியபடி இருந்துள்ளனர். இதையடுத்து அவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். தாலிபான்கள் இவர் இரண்டு மகளுடன் தப்பியதால் மரண தண்டனை அறிவித்துள்ளனர்.

 

 

இதனால் அவர் தாலிபான்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தில் உள்ளார். மேலும் அவர் அழைத்து சென்ற இரண்டு மகள்கள் பற்றி எதுவும் கூறவில்லை.

ஆப்கானில் இருக்கும் இரண்டு மகள்கள் உயிரோடு இருக்கிறார்கள்? இல்லையா என்பதும் அவருக்கு தெரியாத காரணத்தினால், மிகுந்த வேதனையுடவே வாழ்ந்து வருகிறார்.