லீக்கானது BB ஜோடிகள் நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் பற்றிய தகவல்!

விஜய் தொலைக்காட்சி கடந்த சில மாதங்களில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள், சீரியல்கள் புதிதாக தொடங்கப்பட்டன.

அதில் ஒரு நிகழ்ச்சி தான் BB ஜோடிகள், இது நடன நிகழ்ச்சி. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்களை வைத்து நடன நிகழ்ச்சி வடிவமைத்தார்கள்.

நடுவர்களாக நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் இருந்தனர். நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது, அண்மையில் இறுதி நிகழ்ச்சியும் படமாக்கப்பட்டுள்ளது.

நமக்கு கிடைத்த தகவல்படி இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர்களாக ஷாரிக் மற்றும் அனிதா அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகே தெரியும்.