மக்களுக்கு சுகாதார அமைச்சர் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

இலங்கையில் கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் நீடிக்கப்படுவதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளார்.

அதன்படி, நாட்டில் முடக்கம் என்பது அரசாங்க உத்தரவாகும். ஊரடங்கு உத்தரவினை மீறுபவர்களை கைது செய்ய வீதிகளில் ரோந்து செல்லும் ஆயுதப்படைகளால் இந்த முடக்கமானது செயல்படுத்தப்படுவதாக கருத வேண்டாம்.

இது அனைத்து இலங்கை குடிமக்களும் இதயத்தில் எடுத்து கடைபிடிக்க வேண்டிய சமூகப் பொறுப்பு. ஒத்துழைப்பு இல்லாமல் பூஜ்ஜிய முன்னேற்றமே கிட்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அனைவரையும் வீட்டில் இருக்குமாறு டுவிட்டர் பக்கத்தில் நேற்றைய தினம் இட்டுள்ள பதிவொன்றில் அறிவுறுத்தியுள்ளார்.