யாழ்., தென்மராட்சி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசித்து வந்த பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 74 வயதுடைய பெண் உயிரிழந்தார்.
அவரது பி.சி.ஆர். மாதிரி நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.